இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தப் பயணத்தில் இந்திய அணி டி20 தொடரையும், நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றின. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் வெல்லிங்டனில் தொடங்குகிறது.
இதனிடையே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோலி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ள பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் குறித்து பேசினார். கோலி பேசுகையில், ”பிரித்வி திறமை வாய்ந்த வீரர் என்பதால் அவர் அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். மயாங்க் ஆஸ்திரேலியாவில் விளையாடியதைப் போன்று இம்முறையும் விளையாடுவார். பிரித்வி ஷாவும் அதை நியூசிலாந்தில் செய்வார் என்று நம்புகிறேன்.
பிரித்வி ஷாவிற்கு அனுபவம் இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால் மயாங்க் அகர்வாலை அவ்வாறு கூறிவிட முடியாது. ஏனெனில் அவர் கடந்த வருடம் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களையும் குவித்தார். இதன்மூலம் அவரது ஆட்டம் டெஸ்ட் போட்டிக்கான சரியான ஆட்டம்.