தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

காலணியில் தொடங்கி ஷூவில் முடிந்த கோலியின் 10 வருட வாழ்க்கை - அனுஷ்காவுடன் விராட் கோலி

கை இல்லாத பனியன், முகத்தில் மீசையும் இல்லாமல் காலணியுடன் தொடங்கி, ஷூவுடன் முடிந்திருந்த தனது தசாப்தத்தை ஒற்றை புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் கேப்டன் விராட் கோலி.

Virat kohil shares his decade
India cricket team captain Virat kohli

By

Published : Jan 3, 2020, 1:16 PM IST

Updated : Jan 3, 2020, 4:11 PM IST

டெல்லி: கடந்த தசாப்தத்தில் தனது வாழ்க்கை காலணியில் தொடங்கி, ஷூவில் நிறைவடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

2020ஆம் ஆண்டு தொடங்கி 3 நாட்கள் ஆகியும் கொண்டாட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அடுத்த தசாப்தத்தின் தொடக்கம் என்பதால் பலரும் கடந்த பத்து ஆண்டுகளில் தங்களது வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை நினைவுபடுத்தி வருகிறார்கள். இதையடுத்து பிரபலங்கள் பலர் விடியோவாகவும், புகைப்படமாகவும் தங்களது தசாப்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது 10 வருட வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றத்தை ஒரே புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கை இல்லாத பனியன், முகத்தில் மீசையும் இல்லாமல் பதின்ம வயது தோற்றத்தில் கைகளில் பிளப்-பிளாப் காலணி வைத்து பின்னணியில் அருவி தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படமும், அதற்கு கீழே கிரிக்கெட் ஸ்டேடியம் பின்னணியில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஜெர்சி அணிந்தவாறு கைகளில் பூமா ஷூவை வைத்தவாறு எடுத்துக்கொண்ட மற்றொரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதில், புகைப்படத்தின் மேல் பகுதியில் தசாப்தத்தின் தொடக்கம் எனவும், கீழ் பகுதியில் முடிவு எனவும் குறிப்படப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோலி, 'பிளிப்-பிளாப்பில் (காலணி) தொடங்கிய என் வாழ்க்கை இப்போது ஷூவுக்கு' மாறியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

புத்தாண்டை தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சுவிட்சர்லாந்தில் கொண்டாடினார் விராட் கோலி. அப்போது இருவரும் மாறி மாறி புகைப்படங்கள் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளினர்.

இதையடுத்து ஜனவரி 5ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெறவிருக்கும் டி20 போட்டியில் களமிறங்க தயாராகி வருகிறார் கோலி.

Last Updated : Jan 3, 2020, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details