இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டிக்கு முன்னதாக கோலி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 6,800 ரன்களுடன் 57ஆவது இடத்தில் இருந்தார். இப்போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் கோலி 254 ரன்களை குவித்து பல்வேறு சாதனைகளை தனதாக்கிகொண்டார்.
ஒரே இன்னிங்ஸ்தான்... 10 பேரோட ரெக்கார்ட் கிளோஸ் செய்த கோலி! - Virat Kohli records
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த 10 வீரர்களின் இடத்தை கோலி காலி செய்துள்ளார்.
Virat kohli
இதனால், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 57ஆவது இடத்திலிருந்த கோலி தற்போது 7054 ரன்களுடன் 47ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இந்த ஒரு இன்னிங்ஸ் மூலம் அவர், இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்கர், இங்கிலாந்து வீரர் ஸ்ட்ராஸ், ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோருக்கு முன்னிலையில் உள்ளார்.
ஒரே இன்னிங்ஸில் கோலி ஓவர் டேக் செய்த வீரர்கள் விவரம்:
- பாரிங்டன் (இங்கிலாந்து) - 6806 ரன்கள்
- ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து) - 6839 ரன்கள்
- திலிப் வெங்சர்கர் (இந்தியா) - 6868 ரன்கள்
- ஹூட்டான் (இங்கிலாந்து) - 6971 ரன்கள்
- சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 6973 ரன்கள்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)- 6973 ரன்கள்
- டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) - 6996 ரன்கள்
- ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸ் (இங்கிலாந்து)- 7037 ரன்கள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 7043 ரன்கள்