சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரரை தேர்வுசெய்து விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2011-2020ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்குப் பரிந்துரைசெய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை ஐசிசி நேற்று அறிவித்தது.
இதில் ஐசிசியின் கனவு டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பிடித்துள்ளார்.
ஐசிசி கனவு டெஸ்ட் அணி:அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), விராட் கோலி (கே) (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), குமார் சங்ககரா (இலங்கை), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ரவிச்சந்திரன் அஸ்வின் ( இந்தியா), டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).