தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் கோலி தான் டாப்! - சந்தை மதிப்புடைய பிரபலம் கோலி

டெல்லி: இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்புடைய பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

virat-kohli-leads-celebrity-brand-valuation-list-for-third-consecutive-year
virat-kohli-leads-celebrity-brand-valuation-list-for-third-consecutive-year

By

Published : Feb 6, 2020, 12:11 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் டாப்பில் தான் உள்ளார். குலோபல் அட்வைசரி நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள பிரபலங்களிலேயே அதிகமாக பொருளீட்டல் மற்றும் அதிகமான சந்தை மதிப்புடைய பிரபலம் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மதிப்பு 237.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதிக சந்தை மதிப்புடைய பிரபலங்கள் பட்டியல்

இது 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் விராட் கோலியின் வளர்ச்சி 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி முதலிடம் வகித்துவருகிறார்.

தோனி, சச்சின், ரோஹித்

பாலிவுட் பிரபலங்களான அக்‌ஷய் குமார், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக் கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 41.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 9ஆவது இடத்திலும் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்திய வீரர் ரோஹித் சர்மா 20ஆவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: கொரோனா வைராஸால் ஜப்பானில் ஒலிம்பிக் ரத்தாகுமா?

ABOUT THE AUTHOR

...view details