தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தற்போதுள்ள கிரிக்கெட்டில் விராட் கோலியே மிகவும் நிலையான வீரர் - காகிசோ ரபாடா! - தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தற்போதைய கிரிக்கெட்டின் மிகவும் நிலையான வீரர் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

Virat Kohli is the most consistent performer: Rabada
Virat Kohli is the most consistent performer: Rabada

By

Published : Apr 23, 2020, 7:56 PM IST

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக வலம் வருபவர் காகிசோ ரபாடா. இவர் தனியார் விளையாட்டு நிகழ்ச்சிக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், இக்கால கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே மிகவும் நிலையான வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரபாடா, ' தற்போதுள்ள ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் மிகவும் நிலையான வீரர். அதேபோல் பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோரது பேட்டிங்கும் எனக்குப் பிடிக்கும்.

மேலும் நான் தற்போது இருக்கும் இடத்தில் இருப்பது ஒரு காலத்தில் என்னுடைய லட்சியமாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. நான் இப்போது செய்ய விரும்புவது, எல்லாம் சிறப்பாக விளையாடி, எங்கள் அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே' என்று தெரிவித்தார்.

24 வயதே ஆன காகிசோ ரபாடா, தென் ஆப்பிரிக்கா அணிக்காக இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் 197 விக்கெட்டுகளையும், 75 ஒருநாள் போட்டிகளில் 117 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாங்கள் நாட்டுக்காக ஆடினோம்... அவர்கள் அவர்களுக்காக ஆடினார்கள்... ரசிகர்களை சீண்டும் இன்சமாம் உல் ஹாக்!

ABOUT THE AUTHOR

...view details