தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி - சங்ககரா புகழாரம் - தற்போதைய உலகின் சிறந்த பருமனை தேர்வு செய்த சங்ககாரா

உலகில் தற்போதைய சிறந்த பேட்ஸ்மென் விராட் கோலி என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா புகழாரம் சூட்டியுள்ளார்.

Kohli
Kohli

By

Published : Jun 2, 2020, 4:16 AM IST

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா ஜிம்பாப்வே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பொமியோ பங்வாவுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார்.

அப்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவரின் பெயரை குறிப்பிடுமாறு சங்கரராவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சங்ககரா எந்த ஒரு தயக்கமும் இன்றி தற்போதைய உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி என பதிலளித்தார்.

அதேபோல் தற்போது உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் யார் என்ற கேள்விக்கு சங்ககரா, சுழற்பந்துவீச்சாளர் பொருத்தவரையில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் தான் சிறந்த பந்துவீச்சாளர். கடந்த சில ஆண்டுகளாக அவரது ஆட்டத்திறன் பிரமிக்கும் வகையில் உள்ளது. தற்போதைய மாடர்ன் டே பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. அதில் நாதன் லயன் சிறப்பாக செயல்படுகிறார்.

இதுவே வேகப் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் இங்கிலாந்து ஆடுகளத்தில் நீங்கள் ஜேம்ஸ் ஆண்டர்சனைதான் தேர்வு செய்ய வேண்டும். அந்தளவிற்கு அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். அதே சமயம் அனைத்துவிதமான தட்பவெட்ப சூழ்நிலைகளிலும் பந்துவீச கூடிய ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க்கை தான் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் இந்தியாவின் பும்ராவும் தனது ஃபிட்னஸை சீராக வைத்துக் கொண்டால் அவரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளராக ஒரு மாறலாம் என பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details