தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

போட்டிபோட்டு சாதனைகள் படைத்த 'ஹிட்மேன்' ரோஹித், 'கிங்' கோலி! - 2019இல் ஒருநாள் போட்டிகள் கோலி அடித்த ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர்.

virat-kohli-and-rohit-sharma
virat-kohli-and-rohit-sharma

By

Published : Dec 23, 2019, 11:24 PM IST

கட்டாக்கில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதில், 316 ரனகள் இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் கோலி 85 ரன்களும், ரோஹித் சர்மா 64 ரன்களும் அடித்ததன் மூலம், இவ்விரு வீரர்களும் போட்டிப்போட்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

விராட் கோலி - ரோஹித் சர்மா

ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சாதனை:

  • ஒரே ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 1997இல் ஜெயசூர்யா 44 இன்னிங்ஸில் 2,387 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ரோஹித் சர்மா 47 இன்னிங்ஸில் 2,442 ரன்களை குவித்தார்.
    ரோஹித்
  • நடப்பு ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 1,490 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டில் 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர், ஏழு சதம் உட்பட 1,490 ரன்களை எடுத்துள்ளார்.
  • இந்தப் பட்டியலில் கோலி 26 போட்டிகளில் 1,377 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 28 ஒருநாள் போட்டிகளில் 1,345 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

கிங் கோலியின் சாதனைகள்:

  • இப்போட்டியில் கோலி 56 ரன்களை கடந்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்தார்.
    கோலி
  • இறுதியில் கோலி இதுவரை 242 ஒருநாள் போட்டிகளில் 43 சதம் உட்பட 11,609 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.
  • 2019ஆம் ஆண்டில் அதிக ரன்களைக் (அனைத்து விதமானபோட்டிகள்) குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி 44 போட்டிகளில் 2,455 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். டி20யில் 466 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1,377 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 612 ரன்களும் எடுத்திருக்கிறார்.

இது முதல்முறையல்ல:

கோலி ஒரு ஆண்டில் அதிக ரன்களைக் குவித்தது இது முதல்முறையல்ல. முன்னதாக, 2016 முதல் 2019ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலிதான் முதலிடத்தில் உள்ளார்.

கோலி

கடந்த நான்கு ஆண்டுகளில் கோலியின் ரன்கள்:

  1. 2016 - 2,595 ரன்கள்
  2. 2017 - 2,818 ரன்கள்
  3. 2018 - 2,735 ரன்கள்
  4. 2019 - 2,455 ரன்கள்

இந்த ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தைத் தவிர்த்து மற்றதெல்லாம் இந்திய அணியின் மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாகும். நிச்சயம் ஐசிசி தொடர்களையும் வெல்ல நாங்கள் முயற்சிப்போம். ஒட்டுமொத்ததில் இந்த ஆண்டில் நாங்கள் விளையாடிய விதம் திருப்திகரமாக உள்ளது என கோலி நேற்றைய போட்டி முடிந்த பின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:53 போட்டிகளில் 33 வெற்றி... ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த கோலி

ABOUT THE AUTHOR

...view details