இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவரும் , நடிகை அனுஷ்கா ஷர்மாவும் நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு இத்தாலியில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவின் நட்சத்திர ஜோடியாக விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா இணை வலம் வருகின்றனர். இந்த இணை இன்ஸ்டாகிராமில் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இந்நிலையில், விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இப்போது நாங்கள் மூன்று பேர். 2021ஆம் ஆண்டு ஜனவரியில் குழந்தைப் பிறக்கவுள்ளது'' எனப் பதிவிட்டு, மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடப்பு அணியே சிறந்தது: கவாஸ்கர்!