இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இன்று முதல் தொடங்கிங்கியுள்ளது. இத்தொடரின் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி, மத்திய பிரதேசம் அணியை எதிர்கொண்டது.
டஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய ஜார்கண்ட் அணியில், கேப்டன் இஷான் கிஷான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி எதிரணியினரின் பந்துவீச்சுகளை சிக்சர்களுக்குப் பறக்கவிட்டு அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த இஷான் கிஷான், ஒருகட்டத்தில் ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிகளுக்கு விரட்ட, அவருக்கு எப்படி பந்து வீசுவது என புரியாமல் பந்து வீச்சாளர்கள் திகைத்தனர்.
ஆட்டத்தின் முடிவில் ஜார்கண்ட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 94 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டரி, 11 சிக்சர்கள் என 173 ரன்களை குவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இமாலய இலக்கை துரத்திய மத்திய பிரதேசம் அணி வீரர்கள், எதிரணி பந்துவீச்சுகளை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால், 18.4 ஓவர்களிலேயே மத்திய பிரதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஜார்கண்ட் அணி 324 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசம் அணியை வீழ்த்தி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: கோலிவுட்டில் அவதாரம் எடுக்கும் வார்னர்!