இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் ஆடவில்லை என்றாலும், உள்ளூர் தொடர்களில் கில்லியாக வலம்வந்தவர் ஜாஃபர். இவரது தலைமையில் விதர்பா அணி ரஞ்சிக் கோப்பையை முதல்முறையாக வென்று, தனது இருப்பை இந்தியா முழுவதும் பறைச்சாற்றியது.
கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடருடன் ஓய்வை அறிவித்த வாசிம் ஜாஃபர், பயிற்சியாளராகும் திட்டத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது உத்தரகாண்ட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வாசிம் ஜாஃபர் பேசுகையில், ''உத்தரகாண்ட் அணிக்கு பயிற்சியளிக்க ஆர்வமாக உள்ளேன். அந்த அணியில் ஏராளமான இளம் வீரர்கள் திறமையுடன் உள்ளனர். யு-19 அணியின் சிறப்பாக ஆடியுள்ளது. எனது பயிற்சியின் மூலம் அவர்களை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பேன். என்னைப் பொறுத்தரையில் வெற்றிபெறுவதுதான் முக்கியம். அதனால் அணியில் வெற்றியை பெறும் முனைப்பையும், கலாசாரத்தையும் உருவாக்குவதே எனது இலக்கு'' என்றார்.
இதையும் படிங்க:Exclusive: மோன்டி பனேசரின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சச்சின்!