இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகர சாதனையாளனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, கடந்த சனிக்கிழமை (ஆக.15) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தனது ட்விட்டர் பதிவில், ’உங்களுடைய சிறந்த கிரிக்கெட்டிற்கு வாழ்த்துகள் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் களத்தில் நமது போர் தொடரும். ஆனால் உங்கள் ஆட்டத்திறனை மிகவும் மதிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.