தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உடல் நலம் சரியில்லாததால் பயிற்சியிலிருந்து விலகிய போல்ட்! - கரோனா செய்திகள்

உடல்நிலை சரியில்லாததால் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், பயிற்சியிலிருந்து பாதியில் விலகிய சம்பவம் சக விரர்கள் மத்தியிலும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

Unwell Trent Boult skips training camp at Bay Oval Read more
Unwell Trent Boult skips training camp at Bay Oval Read more

By

Published : Jul 20, 2020, 10:50 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் ஒருசில நாடுகளில் வைரஸின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் தங்கள் அணி விரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது. அதன் படி நேற்று தொடங்கிய பயிற்சியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி, நெய்ல் வாக்னர் ஆகியோர் பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை20) தொடங்கிய இரண்டாம் நாள் பயிற்சியின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ட்ரெண்ட் போல்ட், உடல் நலம் சரியில்லததால் பயிற்சியிலிருந்து பாதியிலேயே விலகினர்.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'உடல் நலம் சரியில்லததால் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சியிலிருந்து விலகினார். தற்போது அவர் நலமாக உள்ளதால் நாளைய பயிற்சியின் போது இடம்பெறுவர்' என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டி-20 உலகக்கோப்பை தள்ளிவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details