கரோனா வைரசால் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தன்னுடன் விளையாடிய வீரர்கள் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.
வழக்கத்திற்கு மாறான கேப்டன் கங்குலி: லக்ஷ்மன் புகழாரம்! - பிசிசிஐ தலைவர் கங்குலி
ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் விளையாட்டில் இருந்த, இருக்கும் கேப்டன்களில் இருந்து வழக்கத்திற்கு மாறானவர் என முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
சச்சின், கும்ப்ளே ஆகியோர் பற்றி இரண்டு நாள்களாக பதிவிட்ட நிலையில், இன்று கங்குலி பற்றி பகிர்ந்துள்ளார். அதில், ''கங்குலி கிரிக்கெட் விளையாட்டில் இருந்த, இருக்கும் கேப்டன்களில் இருந்து வழக்கத்திற்கு மாறானவர். களத்தில் கடுமையான வீரர். எப்போதும் பெருமைமிக்க கேப்டனாக இருந்தார். தனது இதயத்தை தனது ஜெர்சியில் வைத்திருப்பார்'' என பதிவிட்டு லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி நாட் வெஸ்ட் தொடரை வென்ற பின் ஜெர்சியை கழட்டிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த தாதாவின் ரசிகர்கள் சில நாஸ்டாலஜிக் சம்பவங்களை நினைவுபடுத்தி வருகின்றனர்.