இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்காக மற்ற அணிகளை விடவும் முன்னதாக சிஎஸ்கே அணியினர் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
கிரிக்கெட்டிலிருந்து 8 மாதங்கள் விலகியிருந்த தோனி, ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கியிருந்தார். இதனால் ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தேர்வுக்குழுவினர் என அனைவரும் ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாடுகளை வைத்தே இந்திய அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரீசிலிக்கப்படும் என்றனர்.
இதனால் மற்ற வீரர்களைவிடவும் தோனிக்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால்தான் மார்ச் 1ஆம் தேதியே சென்னைக்கு வந்து பயிற்சியைத் தொடங்கினார் தோனி. ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.