தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முறியடிக்கப்படாத முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியின் சாதனை! - பேன்னர்மேன்

1877ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடந்த முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் படைக்கப்பட்ட சாதனை இன்று வரையிலும் யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

unbroken-test-records-till-date
unbroken-test-records-till-date

By

Published : Mar 17, 2020, 12:47 PM IST

Updated : Mar 17, 2020, 12:58 PM IST

தற்போதைய சூழலில் கிரிக்கெட்டின் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சாதனைப் படைக்கப்பட்டுக் கொண்டே தான் உள்ளது. ஆனால் 1877ஆம் ஆண்டு நடந்த முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் படைக்கப்பட்ட சாதனை இன்று வரையிலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்த முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியால் எடுக்கப்பட்ட 245 ரன்களில், அந்த அணியின் பேன்னர்மேன் ஒற்றை ஆளாக சதம் விளாசியதோடு 165 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய அணியின் மொத்த ரன்களில் 67.34 சதவிகித ரன்களை பேன்னர்மேன் மட்டும் எடுத்துள்ளார்.

ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட மொத்த ரன்களில் அதிக சதவிகித ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை பேன்னர்மேனிடம் தான் இன்றுவரை உள்ளது. இந்த சாதனையை வேறு எந்த வீரராலும் இன்று வரை முறியடிக்க முடியவில்லை.

இதையும் படிங்க:ஹாப்பி பெர்த்டே டூ டெஸ்ட் கிரிக்கெட்!

Last Updated : Mar 17, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details