தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அவுட்டா? நாட் - அவுட்டா? குழப்பிய அம்பயர் - ஷாக்கான ரஷீத் கான்! - ரஷீத் கான் கொண்டாட்டம்

மெல்போர்ன்: பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் வீசிய பந்தில் கேட்கப்பட்ட எல்பிடபிள்யூ அப்பீலுக்கு அம்பயர் குழம்பி, வீரர்களையும் குழப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

umpire-greg-davidson-hilariously-scratches-nose-after-changing-his-mind
umpire-greg-davidson-hilariously-scratches-nose-after-changing-his-mind

By

Published : Dec 30, 2019, 7:22 PM IST

பிக் பாஷ் தொடரின் நேற்றைய போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிராக அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் ஆடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் 16 ஓவர்கள் முடிவில் 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடியது. இதன்பின் 17ஆவது ஓவரை ரஷீத் கான் வீசினார்.

அம்பயர் கிரேக் டேவிட்சன்

அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் மெல்போர்ன் அணி வீரர் வெப்ஸ்டர் எல்பிடபிள்யூ ஆனார். இதற்கு ரஷீத் கான் அப்பீல் செய்ய, முதலில் விக்கெட் கொடுத்து கையை தூக்கிய அம்பயர், பின்னர் தனது முடிவை மாற்றி தனது மூக்கினை சரிசெய்துகொண்டார்.

முதலில் அம்பயர் விக்கெட் கொடுத்துவிட்டதாக எண்ணி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை, நடுவர் விக்கெட் இல்லை என அறிவுறுத்தினார். களத்திலிருக்கும் அம்பயர் தனது முடிவை திடீரென மாற்றிய சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியாக இந்தப் போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket

ABOUT THE AUTHOR

...view details