தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#INDvsRSA: அதிரடி ஆட்டத்தை காட்டிய உமேஷ் யாதவ்! 500 ரன்களை தாண்டுமா இந்தியா? - IND vs RSA 3rd test update

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்டில் இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 497 ரன்களை குவித்துள்ளது.

#INDvsRSA

By

Published : Oct 20, 2019, 3:06 PM IST

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் நாளில் 58 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தபோது, போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரோஹித் ஷர்மா 117 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் காலை முதலே இருவரும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தை கடந்தார்.

அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 249 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் என 200 ரன்களை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். அதன்பின் ரஹானே 115 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து 212 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபடா பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 464 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய உமேஷ் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தால் 10 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து சிக்சர்களை பறக்கவிட்டார்.

இதன் மூலம் இந்திய அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்களை எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் லிண்டே நான்கு விக்கெட்டுகளையும், ரபடா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: இரட்டை சதமடித்து அசத்தினார் ரோஹித் !

ABOUT THE AUTHOR

...view details