பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் உமர் அக்மல். இவர் மீது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஃபசல், உமர் அக்மல் மீதான சூதாட்டம் குறித்தான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவர் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து உமர் அக்மல், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இவர் தொடர்ந்திருந்த மேல்முறையீடு வழக்கானது வருகிற ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.