இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம்வந்தவர் ரவி சாஸ்திரி. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் தொலைக்காட்சி வர்ணனையாளராக இருந்த இவர், அதன்பின் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றிவருகிறார்.
இவரின் பயிற்சியாளர் தலைமையின் கீழான இந்தியா 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது.
ரவி சாஸ்திரி மே 27ஆம் தேதி தனது 58ஆவது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
- இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில்,"பலர் நம்பிக்கையுடன் இருப்பதுபோல் தெரியலாம். ஆனால், ஒருசிலரே தைரியத்துடன் செயல்படுபவர்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரவி பாய்" எனத் தெரிவித்துள்ளார்.
- ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரவி பாய். இந்தாண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- அஜிங்கியா ரஹானே தனது ட்விட்டரில், உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ரவி பாய். வெகு விரைவில் உங்களைச் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரவி சாஸ்திரிக்கு பல்வேறு துறை பிரபலங்களும் ட்விட்டர் வாயிலாக தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்திய அணிக்காக 230 சர்வதே போட்டிகளில் விளையாடிவுள்ள ரவி சாஸ்திரி, இதுவரை 6,938 ரன்களையும், 280 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘விஜய் மிகச்சிறந்த பண்புடையவர்’ - ஷிகர் தவான்!