தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புதிய சாதனை படைத்த இஷாந்துக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்! - பிங்க் பந்தில் இந்திவில் முதல் விக்கெட்டை எடுத்தவர்

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து வீக்கெட்டுகளைக் கைப்பற்றிய இஷாந்த் சர்மாவுக்கு ட்விட்டரில் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Ishant's 5-wicket haul with pink ball

By

Published : Nov 23, 2019, 12:33 PM IST

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டானது பகலிரவு போட்டியாக கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறினர். குறிப்பாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் மனிமுல் ஹக், முகமது மித்துன், முஷ்பிக்கூர் ரஹிம் ஆகியோர் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர்.

இதன் மூலம் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் வேகப்பந்துவீச்சளர் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். குறிப்பாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட்ட டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக முதல் பந்தை வீசியர், பிங்க் பந்தில் இந்தியாவில் முதல் விக்கெட்டை எடுத்தவர், பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இதனால் இந்திய அணி ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது பாராட்டுகளை இஷாந்த் சர்மாவுக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படிங்க: சக நாட்டு வீரர்களை நலம் விசாரித்த பிரதமர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details