தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டிஎன்பிஎல்: கோவை கிங்ஸிடன் பணிந்தது திருச்சி வாரியர்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ்

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

Trichy Warriors subdued with Coimbatore Kings

By

Published : Jul 27, 2019, 11:53 PM IST

டிஎன்பிஎல் டி20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதிரடியாக ஆடிய அந்தோணி தாஸ் 13 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அதன் பின் களமிறங்கிய அகில் ஸ்ரீநாத் நிலைத்து ஆடி 22 பந்துகளில் 36 ரன்களை அடித்தார்.

இதன் மூலல் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் கண்ணன் விக்னேஷ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆக்ரோசமாக பந்து வீசிய நடராஜன்

அதன்பின் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால் நடராஜனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அந்தோணி தாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details