இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலைஸா ஹேலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். அலைஸா 4 ரன்களில் வெளியேற, தொடர்ந்து ஆஷ்லி களமிறங்கினார். சிறப்பாக ஆடிய மூனி - ஆஷ்லி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஆஷ்லி அருந்ததி ரெட்டி பந்தில் ஆட்டமிழக்க, கேப்டன் லான்னிங் களமிறங்கி அதிரடியாக ஆடினார். மூன்றாவது விக்கெட்டிற்கு மூனி - லான்னிங் இணை 51 ரன்கள் சேர்த்தது. இதனிடையே மூனி அரைசதம் அடித்து அசத்தினார்.
கேப்டன் லான்னிங் 26 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி 155 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய தொடக்க வீராங்கனை பெத் மூனி 54 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க:'தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை' - ட்விட்டரில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் கேப்டன்!
பின்னர் 156 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஷஃபாலி வர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, தொடர்ந்து ரிச்சா கோஷ் வந்தார். இதையடுத்து அதிரடி ரன் குவிப்பில் ஸ்மிருதி ஈடுபட, இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 54 ரன்களை எடுத்தது.