ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து வருகிற 26ஆம் தேதி மெல்போர்னில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நேற்று நடைபெற்ற பயிற்சியில் போல்ட் மீண்டும் பந்துவீச்சி பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து உறுதிசெய்யபட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் போட்டியாகும், இது பெரும்பாலான வீரர்களின் கனவு மேடையாகும். முதல் டெஸ்ட் போட்டியை பவுண்டரிலைனுக்கு வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது. இதனால் நான் அடுத்த போட்டியில் அணியின் நிச்சயமாக பங்கேற்பேன் என்றார்.
தற்போது இந்த தகவலானது நியூசிலாந்து ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபர்குசன் காயம் காரணமாக தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். தற்போது அந்த இடத்தை போல்ட் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 400ஆவது போட்டியில் களமிறங்கிய கோலி; சோதனையில் முடிந்த சாதனை!