மறைந்த முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே தலைமையிலான, தென் ஆப்பிரிக்க அணி 2000ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்துப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடரின் போது, ஹன்சி குரோனியே இடைத்தரகரிடம் பணம் பெற்றுக்கொண்டு, மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
உலகம் முழுவதும் இந்தத் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட புகார்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, அப்போதைய இந்திய அணியின் கேப்டன் அசாரூதின் இந்தப் புகாரில் சிக்கியது. இந்திய கிரிக்கெட்டை தலைகீழாக புரட்டிப்போட்டது. அப்போதைய டெல்லி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சஞ்சீவ் சாவ்லா இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதனால், 2000ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற, அவருக்கு 2005ஆம் ஆண்டில் இங்கிலாந்து குடியுரிமையைப் பெற்றார்.
இதனிடையே, 2002ஆம் ஆண்டில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹன்சி குரோனியே விமான விபத்தில் உயரிழந்தார். இதைத்தொடர்ந்து, சூதாட்ட இடைத்தரகரான சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்தும்படி இந்தியா, 2016ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டதால் பிரிட்டன் அரசு அவரை கைது செய்தது.