பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக இளம் வீரர் பாபர் அஸாம் சில நாள்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே பாபர் அஸாமை பாகிஸ்தானின் விராட் கோலி எனப் பேசி வந்தவர்களுக்கு, கேப்டன்ஷிப் நியமினம் இன்னும் அதிகமாக பேசக் காரணமாக அமைந்தது. இதனிடையே கேப்டன்ஷிப்பால் பாபரின் ஆட்டம் பாதிக்கும் என்றும் கருத்துக்கள் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் யூனுஸ் கான் பேசுகையில், '' பாகிஸ்தான் ஒருநாள் அணி கேப்டன் பாபர் அஸாமை இந்திய அணி கேப்டன் விராட் கோலியோடு ஒப்பிடுவதற்கு இது சரியான தருணம் அல்ல. ஏனென்றால் கடந்த பத்து ஆண்டுகளில் விராட் கோலி தனது பெயரில் 70 சதங்கள் அடித்து அனைத்து சூழல்களிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
மறுபக்கம் பாபர் அஸாம் சில ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 16 சதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஆவரேஜ் வைத்துள்ளார். ஆனால் விராட் கோலி அளவிற்கு பாபர் ஆதிக்கம் செலுத்தவில்லை.