தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி ப்ளே- ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த காஞ்சி வீரன்ஸ்! - காஞ்சி வீரன்ஸ் vs திருச்சி வாரியர்ஸ்

திருநெல்வேலி: டிஎன்பிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

காஞ்சி வீரன்ஸ்

By

Published : Aug 9, 2019, 11:08 PM IST

டிஎன்பிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்த்து காஞ்சி வீரன்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை சேர்த்தது.

இதனையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ் அணிக்கு விஷால் - லோகேஷ்வர் ஜோடி தொடக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 24 ரன்கள் சேர்ந்த நிலையில் விஷால் 15 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சுகேந்திரன் 3 ரன்களில் வெளியேறினார்.

காஞ்சி வீரர் சுகேந்திரன்

பின்னர் லோகேஷ்வர் - கேப்டன் அபராஜித் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு முனையில் அனுபவ வீரர் அபராஜித் சிக்ஸர்களாக அடித்து அசத்த, மறுமுனையில் லோகேஷ்வர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 82 ரன்களை எட்டியபோது லோகேஷ்வர் 40 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சஞ்சய் யாதவுடன் இணைந்து கேப்டன் அபராஜித் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

சிக்ஸர் விளாசும் அபராஜித்

இறுதியாக காஞ்சி வீரன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளுக்கு அரைசதம் அடித்த கேப்டன் அபராஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் காஞ்சி வீரன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details