தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டிஎன்பிஎல்: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 171 ரன்கள் இலக்கு! - kk

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 172 ரன்களை காரைக்குடி காளை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

TNPL: Ruby Trichy Warriors target 171 runs

By

Published : Jul 20, 2019, 5:22 PM IST

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இன்று திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியும் காரைக்குடி காளை அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ரூபி வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய காரைக்குடி அணி ஆரம்பத்தில் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆதித்யா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சூர்யபிரகாஷ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் அனிருதா.

பின்னர் அந்த அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். அவர் 36 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் மான் பாஃப்னா 21 பந்துகளில் 30 ரன்களும், ராஜ் குமார் 13 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் மான் பாஃப்னா.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் காரைக்குடி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. ரூபி வாரியர்ஸ் அணியில் சரவண் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணி பேட்டிங் ஆடிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details