தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா எதிரொலி: டிஎன்பிஎல் தொடர் மீண்டும் ஒத்திவைப்பு! - ஐபிஎல் 2020

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரை நவம்பர் மாதம் அல்லது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

TNPL 2020 postponed to November or March 2021
TNPL 2020 postponed to November or March 2021

By

Published : Aug 1, 2020, 7:53 PM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த விளையாட்டு தொடர்கள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மினி ஐபிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக்(டிஎன்பிஎல்) டி20 தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தொடர்ந்து அதிகரித்து வந்த கரோனா பெருந்தொற்றினால், டிஎன்பில் தொடரின் ஐந்தாவது சீசனை இந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டிஎன்பிஎல் தொடரை மீண்டும் ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து டிஎன்சிஏ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசனை இந்தாண்டு நவம்பர் மாதம் அல்லது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை டிஎன்சிஏ ஆராய்ந்து வருகிறது’ என்று பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: விரைவில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே!

ABOUT THE AUTHOR

...view details