தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அஷ்வினை குழப்பமடைய செய்த முரளி விஜய் - அஷ்வினை குழப்பமடைய செய்த முரளி விஜய்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அஷ்வினை குழப்பமடைய செய்யும் வகையில் முரளி விஜய் இடதுகையில் பேட்டிங் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

அஷ்வினை குழப்பமடைய செய்த முரளி விஜய்

By

Published : Aug 6, 2019, 12:28 AM IST

தமிழ்நாடு கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஷ்வின் பந்தை வீசுவதில் பல வித்தியாசமான முறைகளை கையாண்டு எதிரணி வீரர்களை குழப்பமடைய செய்துவருகிறார்.

இந்நிலையில், இவருக்கு சவால் தரும் வகையில் முரளி விஜய் புதிய யுத்தியை பயன்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில், ரூபி திருச்சி அணிக்காக முரளி விஜய் ஆடினார்.

அப்போது, அஷ்வின் வீசிய 15ஆவது ஓவரை எதிர்கொண்ட முரளி விஜய், திடீரென்று இடதுகையில் பேட்டை மாற்றி ஆட முயற்சித்தார். தொடர்ந்து அஷ்வினின் இரண்டு பந்துகளையும் அவர் இடதுகையிலேயே பேட்டிங் செய்தார். ஆனால், எதிர்பார்த்த அளவில் பெரிய ரன் அடிக்க முடியாமல் போனது.

பின்னர் அஷ்வின் நோபால் வீச,அதன்பின் கிடைத்த ப்ரிஹிட் பந்தை முரளி விஜய் சிக்சருக்கு பறக்கவிட்டார். முரளி விஜய் இடதுகையில் பேட் செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. இறுதியில், திண்டுக்கல் அணி இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details