தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#TNPL2019: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விசாரணைக் குழு அறிக்கை! - அறிக்கை தாக்கல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினால் அமைக்கப்பட்ட குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

#TNPL2019

By

Published : Oct 3, 2019, 7:48 PM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் நான்காவது சீசன் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், அதில் விளையாடிய சில வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்திகள் வருவதாக வீரர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமூம் (டிஎன்சிஏ) தனது பங்கிற்கு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து டிஎன்பிஎல்லில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரித்து வந்தது.

இந்நிலையில் இன்று அந்த விசாரணைக்குழு தனது அறிக்கையினை டிஎன்சிஏவிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ’டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும் டிஎன்பிஎல் நம்பகத்தன்மையை காக்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்’ என்றும் அறிக்கையை தாக்கல் செய்ததுள்ளது.

மேலும் இதுகுறித்து டிஎன்சிஏ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறுகையில், 2019ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் எந்த விதமான ஊழல் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதை இந்த தெளிவான அறிக்கையில் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #TNPL: சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி பரிமாற்றங்கள்: அரங்கேறியதா சூதாட்டம்... அதிர்ச்சியில் பிசிசிஐ!

ABOUT THE AUTHOR

...view details