இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் ஆதித்யா டாரே, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ஷாம்ஸ் முலானி அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்தது. தமிழ்நாடு அணி சார்பில் சித்தார்த் நான்கு விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.