இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில், பந்துவீச்சாளர் டிம் சவுதி, ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த ஒரு சிக்சர் மூலம், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சச்சினின் சாதனையை அசால்ட்டாக சமன் செய்த டிம் சவுதி! - டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் சவுதி அடித்த சிக்சர்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய ஜாம்பவான் வீரர் சச்சினின் சாதனையை நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிம் சவுதி சமன் செய்துள்ளார்.
200 டெஸ்ட் போட்டிகளில், 329 இன்னிங்ஸில் ஆடியுள்ள சச்சின்,69 சிக்சர்களைஅடித்துள்ளார். அதேசமயம், இச்சாதனையை சமன் செய்ய 66 டெஸ்ட், 96 இன்னிங்ஸ் மட்டுமே டிம் சவுதி எடுத்துகொண்டார். இதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சவுதி 19ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஒரு பந்துவீச்சாளராக இவர் இந்த இடத்தை பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பட்டியலில், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கலம் 107 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் பறக்கவிட்ட வீரர்கள்:
- மெக்கலம் (நியூசிலாந்து) - 107 சிக்சர்கள்
- கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) - 100 சிக்சர்கள்
- கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 98 சிக்சர்கள்
- காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 97 சிக்சர்கள்
- சேவாக் (இந்தியா) - 91 சிக்சர்கள்
TAGGED:
Sachin sixes in Test Cricket