இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது. இதின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்துவரும் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து விளையாடிவருகிறது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே மற்றும் ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறது. இப்போட்டியின் போது இந்திய அணியின் ரிஷப் பந்த் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் டிம் பெய்னிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், தனது 33ஆவது டெஸ்ட் போட்டியின் 150 விக்கெட்டுகளை விக்கெட் கீப்பிங் முறையில் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகளை விக்கெட் கீப்பிங் முறையில் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.