பிரபல இஎஸ்பியன் கிரிக் இன்ஃபோ கிரிக்கெட் இணையதளம் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த கால ஜாம்பவான்கள், தற்போதைய சிறந்த வீரர்கள் என 10 ஜோடிகளின் புகைப்படத்தை வெளியிட்டது.
அதில், கோலி vs வார்னே, பாபர் அசாம் vs மெக்ராத், சயத் அன்வர் vs பும்ரா, கெவின் பீட்டர்சன் vs ரபாடா, கேன் வில்லியம்சன் vs முரளிதரண், ரிக்கி பாண்டிங் vs ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் vs அக்தர், லாரா vs வாக்னர், சச்சின் vs ரஷித்கான், டி வில்லியர்ஸ் vs அக்ரம் என இந்த 10 ஜோடிகளில் யாரது சவால்களைப் பார்க்க உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது என்ற கேள்வியைக் கேட்டது.
இந்தப் புகைப்படத்தை பார்த்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், மூன்று பவுன்சர் பந்துகளால் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தை தாக்கிய பின்னர் நான்காவது பந்தில் நான் அவரை அவுட் செய்துவிடுவேன் என பதிலளித்தார். இதையடுத்து, அக்தரின் இந்த ட்வீட்டை கேலி செய்யும் விதமாக ஐசிசி பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.