இந்திய அணியின் நடுவரிசையில் ஆடிய வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வை அறிவித்து வெளியேற, கங்குலியால் அடையாளம் காணப்பட்டு இந்திய அணிக்குள் இடம்பித்தார் இடதுகை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் அறிமுகமான ஐசிசி நாக் அவுட் தொடரில் கென்யாவுக்கு எதிராக களமிறங்கி பல்வேறு வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தார். முக்கியமாக தென்னாப்பிரிக்காவை போல் ஃபீல்டிங் செய்யும் வீரர்கள் நம் அணியில் இல்லையே என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இவரது ஃபீல்டிங் இருந்தது.
இந்திய அணியின் நடுவரிசை பிரச்னையை தீர்த்து வைத்தது, 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இழந்த இந்திய அணிக்கு அதே ஆண்டில் டி20 உலகக்கோப்பையை பெற்றுத்தர காரணமாக இருந்தது, அதற்கும் மேலாக 28 ஆண்டுகளாக இந்திய அணி தவறவிட்ட உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததும் யுவராஜ் சிங்தான்.