தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொடரைக் கைப்பற்றிய கையோடு கேக் வெட்டி கொண்டாடிய ‘பர்த் டே பாய்ஸ்’! - Shreyas iyer

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய கையோடு, இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Three member of Indian team birthday today
Three member of Indian team birthday today

By

Published : Dec 6, 2020, 8:26 PM IST

ஆஸ்திரேலியா - இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது மட்டுமின்றி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோர் தொடரைக் கைப்பற்றிய கையோடு கேக் வெட்டி கொண்டாடிய காணொலியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் இன்றைய போட்டியின் போது ஷிகர் தவான் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் தனது 11ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பும்ராவின் சாதனையை சமன் செய்த சஹால்!

ABOUT THE AUTHOR

...view details