தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி10 லீக்கில் பங்குபெறும் மேலும் 3 இந்தியர்கள்! - அபுதாபி

அடுத்த ஆண்டு அபுதாபியில் தொடங்க இருக்கும் டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் பங்கேற்கவுள்ளனர்.

Three Indians to play in fourth edition of Abu Dhabi T10
Three Indians to play in fourth edition of Abu Dhabi T10

By

Published : Dec 26, 2020, 8:02 AM IST

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் டி20 தொடரைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்விதமாக டி10 லீக் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகம் நடத்திவருகிறது.

2017ஆம் ஆண்டு எட்டு அணிகளுடன் தொடங்கிய இத்தொடரின் நான்காவது சீசன் 2021ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதிமுதல் பிப்ரவரி 06ஆம் தேதிவரை, அபுதாபியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் நான்காவது சீசனிலிருந்து கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்கு பதிலாக புனே டெவில்ஸ் என்ற புதிய அணி அறிமுகமாகவுள்ளதாக டி10 லீக் கூட்டமைப்பு அறிவித்தது.

மூன்று இந்தியர்கள்

இத்தொடரின் முந்தைய சீசன்களில் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், சுப்ரமணியம் பத்ரிநாத், முனாஃப் படேல், ஜாகீர் கான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது மேலும் மூன்று இந்தியர்கள் வரவுள்ள நான்காவது சீசன் டி10 லீக்கில் பங்கேற்க ஒப்பந்தமாகியுள்ளனர். அதில் சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் தாம்பே, இஷான் மல்ஹோத்ரா, பிரஷாந்த் குப்தா ஆகியோர் டி10 லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் பிரவீன் தாம்பே முன்னதாக ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் கடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம், சிபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் இந்தியர் என்னும் பெருமையையும் பெற்றார்.

மேலும் இஷான் மல்ஹோத்ரா ஐபிஎல் அணிகளான டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிரஷாந்த் குப்தா, ரஞ்சி கோப்பைத் தொடரில் இந்திய ரயில்வேஸ் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி10 லீக் அணிகள்:

குழு ஏ

மராத்தா அரேபியன்ஸ்:சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், லாரி எவன்ஸ், மொசாடெக் ஹொசைன், டாஸ்கின் அகமது, பிரவீன் தாம்பே, இஷான் மல்ஹோத்ரா, முக்தார் அலி, அம்ஜத் கான், அப்துல் ஷகூர், மாரூப் வணிகர், சோம்பால் காமி, சையத் ஷா

பங்களா டைகர்ஸ்: இசுரு உதனா, ஆண்ட்ரே பிளெட்சர், டாம் மூர்ஸ், கைஸ் அஹ்மத், சிராக் சூரி, ஜான்சன் சார்லஸ், டேவிட் வைஸ், முகமது இர்பான், அஃபிஃப் ஹொசைன், ஆடம் ஹோஸ், கரீம் ஜனத், ஆரியன் லக்ரா, ஃபசல் ஹக், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், மெஹதி ஹசன்.

டெல்லி புல்ஸ்: டுவைன் பிராவோ, அலி கான், முகமது நபி, துஷ்மந்தா சமீரா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், எவின் லூயிஸ், தசுன் ஷானகா, ஆடம் லித், ரஹ்மானுல்லா குர்பாஸ், பிடல் எட்வர்ட்ஸ், ஷிராஸ் அகமது, காஷிஃப் தாவுத், வக்கார் சலாம்கெய்ல், நெய்ம் யங், அமத் பட்

நார்த்தன் வாரியர்ஸ்: ரஸ்ஸல், ராயத் எம்ரிட், நிக்கோலஸ் பூரன், லெண்டல் சிம்மன்ஸ், வஹாப் ரியாஸ், ஜுனைத் சித்திக், ரோமன் பவல், ஃபேபியன் ஆலன், நுவான் பிரதீப், அமர் யமின், பிராண்டன் கிங், வாஹீத் அகமது, மகீஷ் தீக்ஷனா, அன்ஷ் டாண்டன்.

குழு பி

டெக்கான் கிலாடியேட்டர்ஸ்: சுனில் நரைன், பொல்லார்ட், பானுகா ராஜபக்ஷ, ஜாகூர் கான், காலின் இங்க்ராம், முகமது சஸாத், வாணிந்து ஹசரங்கா, லஹிரு குமார, அசாம் கான், ரவி ராம்பால், பிரசாந்த் குப்தா, ஸிஷன் ஜமீர், ஹம்தான் தாஹிர், ஹபீஸ்-உர்-ரஹ்மான், இம்ரான் தாஹிர், அஹ்மத்.

கலந்தர்ஸ்: சாஹித் அஃப்ரிடி, சமித் படேல், பில் சால்ட், கிறிஸ் ஜோர்டன், சுல்தான் அகமது, டாம் பான்டன், சோஹைல் தன்வீர், ஆசிப் அலி, ஹசன் அலி, சோஹைல் அக்தர், ஷர்ஜீல் கான், ஃபயாஸ் அகமது, அஸ்மத்துல்லா ஒமர்சாய், மாஸ் கான், குர்ஷித் அன்வர், பென் டங்க்.

டீம் அபுதாபி:கிறிஸ் கெய்ல், ரோஹன் முஸ்தபா, லூக் ரைட், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, ஹைடன் வால்ஷ் ஜூனியர், கிறிஸ் மோரிஸ், உஸ்மான் ஷின்வாரி, நவீன்-உல்-ஹக், ஓபேட் மெக்காய், நஜிபுல்லா ஸத்ரான், பென் காக்ஸ், பழனியப்பன் மெய்யப்பன், லியோனார்டோ ஜூலியன், குஷால் மல்லா, அலெக்ஸ் ஹேல்ஸ்.

புனே டெவில்ஸ்: திசாரா பெரேரா, முகமது அமீர், ஹார்டஸ் வில்ஜோன், சாமரா கபுகேந்தேரா, சாம் பில்லிங்ஸ், அஜந்தா மெண்டிஸ், டெவன் தாமஸ், டார்விஷ் ரசூலி, நசீர் ஹொசைன், கென்னர் லூயிஸ், ஆசிப் கான், முகமது பூட்டா, தினேஷ் குமார், விரித்யா அரவிந்த், கரண் கே.சி., முனிஸ் அன்சாரி.

இதையும் படிங்க:ரோனால்டோ உள்பட கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details