இந்தியாவில் ஆண்டு முழுவதும் மகளிருக்கான கிரிக்கெட் தேர்வு நடைபெற்று வருகின்றது. இதில் அண்டர் 19, அண்டர் 23, அண்டர் 15 என பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம்.
அணி தேர்வுக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்! - மகளிர் அண்டர்23 டி20 கோப்பை
கொல்கத்தா: இந்திய மகளிர் அண்டர் 23 தேர்வுக்காக கொல்கத்தா சென்ற மூன்று தேர்வர்கள் சாலை விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
team selectors meet with accident
இந்நிலையில், வரவிருக்கும் மகளிர் அண்டர் 23 டி20 கோப்பை தொடருக்கான அணி தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவிற்கு கிரிக்கெட் அணி தேர்விற்காக சந்தனா, பூர்ணிமா, ஷியமா ஆகியோர் சென்றுகொண்டிருந்தகார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய மூன்று தேர்வர்களும் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்தை பழி தீர்த்த நியூசி...!