ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா இந்த தினத்தை உருவாக்கியுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டுட்ட நாடுகள் இந்த தினத்தைக் கொண்டாடிவருகின்றன.
உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து ரோகித் சர்மா ட்வீட்! - ஐபிஎல்2020
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரோகித்தின் ட்விட்டர் பதிவில், "இந்த உலக சுற்றுச்சூழல் தினம் உலக உயிர்கள் அணைத்தையும் தழுவுகிறது. இந்த பல்லுயிர் தின கொண்டாட்டத்தில் என்னுடன் சேர்ந்து நீங்களும் கொண்டாடுங்கள். தெளிவான நீல வானம், பறவைகள், வனவிலங்குகளை பாதுகாப்போம். இது இயற்கைக்கான நேரம். அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.