ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று (பிப். 18) நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இதில் அறிமுக வீரர்களுக்கான ஏலத்தில் தமிழ்நாடு அணி வீரர் ஷாருக் கானின் அடிப்படை விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடந்தது.
சமீபத்தில் நடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் தமிழ்நாடு அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஷாருக் கானின் ஆட்டம் காரணமாக அமைந்தது. அப்போதே ஷாருக்கானை இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய ஏலத்தின்போது டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டின. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஷாருக் கானை ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிங்க: அகமதாபாத் புறப்பட்ட இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்!