பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் நேற்று பாகிஸ்தானின் புதிய டெஸ்ட் கேப்டனாக அசார் அலி நியமிக்கப்பட்டர். அதன் பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், "இதைவிட தனக்கு பெரிய மரியாதை இருக்க முடியாது" என்று கூறினார். "இது ஒரு பாரம்பரியத்தை விட்டு வெளியேற எனக்கு ஒரு வாய்ப்பாகும். பாகிஸ்தானுக்காக நான் இதுநாள் வரை விளையாடிய கிரிக்கெட், நான்கு-ஐந்து ஆண்டுகளுக்குள் தன்னை ஒரு வீரராகவும், கேப்டனாகவும் மாற்றியுள்ளது.
மேலும், அச்சமற்ற அணுகு முறையுடன் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விரும்பிய முடிவுகளைப் பெறுவதில், தனது கவனம் இருக்கும். தற்போது ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்தில் பாகிஸ்தான் அணி இருக்கிறது. எனது செயல்பாட்டினால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவுவேன்" என்று அசார் கூறினார்.
மேலும் அவர் "டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகிறது. அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பை போன்றது. இப்போதே, நாங்கள் தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கிறோம். எனவே எங்களுக்கு பயணிக்க நிறைய தூரம் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நாங்கள் விளையாடும் அணிகள் கிட்டத்தட்ட, எங்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கும். எனவே, பல சவால்கள் உள்ளன. ஆனால் அச்சமற்ற, அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுவதற்கும், விரும்பிய முடிவுகளைப் பெறுவதற்கும் இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.
எனவே வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. ஆனால், ஒரு நேர்மறையான அணியை உருவாக்குவது எனது முன்னுரிமை. உங்களுக்குத் தெரியும், நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்தேன். ஏனென்றால் இது விளையாட்டின் சிறந்த வடிவம் மற்றும் வீரர்களின் சிறந்த திறன்களைக் காணும் வடிவம் எனக் கருதுகிறேன். எனது வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதே, எனது முன்னுரிமை" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:’நாங்க என்ன வேணும்னேவா ட்வீட்ட போட்டோம்.. தெரியாம வந்துருச்சுங்க’