தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

லாக் டவுன் நாள்களிலும் பிசியாக இருக்கும் ஜெமீமா ரோட்ரிக்ஸ்...! - Womens Cricket

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ், லாக் டவுன் நாள்களில் யூ-டியூப் நேர்காணல்கள், ப்ராட்கேஸ்ட் ஆகியவை சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

this-break-has-helped-us-switch-off-and-recharge-ourselves-jemimah-rodrigues
this-break-has-helped-us-switch-off-and-recharge-ourselves-jemimah-rodrigues

By

Published : May 18, 2020, 4:13 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. சில நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்களின்றி மூடப்பட்ட மைதானங்களிலேயே போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் ரசிகர்களை உயிர்ப்புடன் வைக்க வீரர்கள் இன்ஸ்டாகிராமில் உரையாடி வருகின்றனர். வீரர்கள் நேர்காணல், உரையாடல் என்ற ஒரு பக்கம் களமாட, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் யூ-டியூப், ப்ராட்கேஸ்ட் என சோலோவாக ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

ஜெமீமாவும், ஸ்மிருதி மந்தனாவும் யூ-டியூபில் செய்யும் நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் செம ஹிட். லாக்-டவுன் நாள்கள் பற்றி ஜெமீமா பேசுகையில், ''கிரிக்கெட்டராக சிறிது கடினமாக உள்ளது. எப்போதும் பயணங்கள், பயிற்சிகள் என நாள்கள் சென்ற நிலையில், வீட்டிலேயே ஓய்வு எடுப்பது சுமையாக உள்ளன. டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் நான் பயன்படுத்திய சூட்கேஸை பிரிக்கவே வெகு நாள்கள் ஆகிவிட்டன. எனது அம்மாவின் அறிவுறுத்தலால் தான் சூட்கேஸை பிரித்தேன்.

இந்த லாக் டவுன் நாள்களில் நானும் ஸ்மிருதியும் யூ-டியூபில் செய்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுபோக தென் ஆப்பிரிக்காவின் டுமினியுடன் இணைந்து நடத்திய ப்ராட்கேஸ்ட்டும் ஹிட்டாகியுள்ளன. அதனால் லாக் டவுன் நாள்களிலும் கொஞ்சம் பிசியாகவே இருக்கிறேன்.

சிந்து, சானியா மிர்சா, ரோஹித் ஷர்மா என அனைவருடனான உரையாடல் எனக்கு உதவியுள்ளன. உலகக்கோப்பைத் தொடருக்கு இந்த ஓய்வு அமைந்துள்ளதால், இந்த நேரத்தில் என்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளேன். எனது பேட்டரியை (மன உறுதி) ரீசார்ஜ் செய்துள்ளேன்.

மகளிர் வீராங்கனைகள் அனைவரும் பயிற்சியாளர் ராமன் வழிகாட்டுதல்களில் சரியான பயிற்சிகளை வீட்டிலேயே மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.

இதையும் படிங்க:கிரிக்கெட்டர் ஸ்மிருதி மந்தனா!

ABOUT THE AUTHOR

...view details