இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் மைதானத்திற்குள் வந்ததும் மைதானத்திலிருந்த ரசிகர்கள் அவரை உற்சாகமூட்டும் விதத்தில் கூச்சலிட்டனர்.
இதை மைதானத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சஞ்சு சாம்சனிடம் விளையாட்டுத்தனமாக நடந்துகொண்டதை கண்டதும் அதைவிட அதிகமாக சத்தமிட்டு, மைதானத்தை அலறச்செய்தனர். இந்தக் காணொலியை தற்போது பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இருப்பினும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்காததால், அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையும் படிங்க: ரொனால்டோவின் ஹாட்ரிக் சாதனையை அசால்ட் செய்த மெஸ்ஸி