இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, யாரும் எதிர்பாரத வண்ணம் ஆக.15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தோனியின் ஓய்வு முடிவுக்கு பல்வேறு துறை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், காணொலி வாயிலாக தோனிக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த காணொலியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்தக் காணொலியில், “நாட்டிற்காக விளையாடி, சாதனைகள் படைக்க விரும்பும் ஒவ்வொரு சிறு நகர வீரர்களுக்கும், தோனி என்பவர் மிகப்பெரும் கனவு. அவரின் மரியாதை, புகழ், அவருக்கான மக்களின் அன்பு, கடினமான சூழ்நிலைகளில் கூட அவரது இயல்பான மனநிலை, அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையைக் கண்டு நான் வியந்துள்ளேன்.
அந்த கிரிக்கெட் பாடப்புத்தகத்திலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கான தனித்துவம் அமைந்திருக்கும். அது அவருடைய தன்னம்பிக்கை மற்றும் திறமைக்கு கிடைத்த ஒரு சான்றாகும். அவரைப் போன்று மற்றோருவர் ஒருபோதும் கிடைக்கமாட்டார்.
அனைத்து காலங்களிலும் தோனி ஒரு நிஜ ஜாம்பவான்” என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க:தோனி & ரெய்னா ஓய்வு: மணல் சிற்பத்தில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்!