தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#GL t20: அன்ஷுமன் ராத் அதிரடியில் வீழ்ந்தது வின்னிபெக் ஹாக்ஸ் - winnipeg hawks

ஒன்டாரியோ: வின்னிபெக் ஹாக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எட்மண்டன் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

The Winnipeg Hawks fell to Anshuman Roth in action

By

Published : Aug 4, 2019, 7:01 AM IST

குளோபல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது லீக் போட்டியில் ஜே.பி. டுமினி தலைமையிலான வின்னிபெக் ஹாக்ஸ் அணியும், முஹமது ஹஃபீஸ் தலைமையிலான எட்மண்டன் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

பந்தை பவுண்டரிக்கு விளாசிய ஷைமன் அன்வர்

அதைத் தொடர்ந்து ஆடிய ஹாக்ஸ் அணியில் தொடக்க வீரர் ஷைமன் அன்வர் 65 ரன்களும், கிரிஸ் லின் 33 ரன்களும் விளாசினர். அதன் பின் வந்த ஹாக்ஸ் அணியின் கேப்டன் டுமினி அதிரடியாக ஆடி 48 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்தது. ராயல்ஸ் அணி தரப்பில் ஜிம்மி நீசம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய அன்ஷுமன் ராத்

இதையடுத்து ஆடிய ராயல்ஸ் அணியின் அன்ஷுமன் ராத், மற்றும் ஹஃபீஸின் அதிரடி ஆட்டத்தால் 17. 4 ஓவர்களிலேயே 198 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாக்ஸ் அணியை வென்றது.

ராயல் அணி சார்பாக அன்ஷுமன் ராத் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 87 ரன்களையும், அணியின் கேப்டன் ஹஃபீஸ் 30 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அன்ஷுமன் ராத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details