தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வரும் ஐபிஎல்லில் தோனியின் வித்தியாசமான ஆட்டத்தை பார்க்கலாம் - ரெய்னா - தோனி குறித்து சுரேஷ் ரெய்னா

டெல்லி: வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமான முறையில் பயிற்சி மேற்கொண்டிருப்பதால் வரும் ஐபிஎல்லில் தோனியிடம் புதுமையான ஆட்டத்தை காணலாம் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.

IPL 2020
Dhoni batting practice

By

Published : Jun 2, 2020, 8:39 PM IST

13ஆவது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரு துருவங்களாக செயல்பட்டு வரும் தோனி - ரெய்னா ஆகியோர் இந்தத் தொடருக்காக மார்ச் 3ஆம் தேதியிலிருந்தே பயிற்சியை தொடங்கினர்.

பயிற்சியின்போது எம்.எஸ். தோனி தனது வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமான முறையில் பயிற்சி மேற்கொண்டதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

”பயிற்சி தொடங்கிய சில நாள்கள் ஜிம் செல்வதில் அதிக கவனம் செலுத்தினார் தோனி. மிகவும் எளிமையான பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு சில அற்புதமான ஷாட்களை ஆடினார். அவர் ஃபிட்னஸ் சிறப்பாக இருந்ததுடன், எளிதில் சோர்வடையாமல் இருந்தார்.

இந்த முறை இவர் மேற்கொண்ட பயிற்சிகள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தன. அவருடன் இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடர் என பல ஆண்டுகளாக இணைந்து விளையாடி வருகிறேன். இரண்டு மாதங்கள் அவர் பயிற்சியில் ஈடுபட்டதை நேரில் பார்த்ததால் இம்முறை விரைவான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்.

நான், முரளி விஜய், அம்பத்தி ராயுடு ஆகியோர் தோனியுடன் சென்னையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டோம். அப்போது சுமார் 4 மணி நேரம் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். காலையில் ஜிம், மாலையில் பேட்டிங் பயிற்சி என மேற்கொள்வதால், சோர்வு இல்லாமல் இருக்கிறார்” என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு தோனி எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட தயாராகி வந்த வேளையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டித் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா தொற்று காரணமாக அந்தத் தொடர் தள்ளிவைக்கப்பட்டால், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ-க்கு அரிய வாய்ப்பாக அமையும். ஆனால் இந்த ஆண்டில் ஐபிஎல் தொடர் நடப்பதற்கான வாய்ப்புகள் நிகழுமா என்பதை பொறுத்தான் பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details