கானடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில், யுவராஜ் சிங் தலமையிலான டொராண்டோ நேஷனல்ஸ் அணியும் கிரிஸ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற வான்கூவர் நைட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
குளோபல் டி20: 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டொராண்டோ நேஷனல்ஸ் - global t20
ஒன்டாரியோ: வான்கூவர் நைட்ஸ் அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டொராண்டோ நேஷனல்ஸ்.
இதையடுத்து, முதலில் விளையாடிய நேஷனல்ஸ் அணியின் அதிரடி ஆட்டகாரர்கள் பிரண்டன் மெக்கல்லம் 4 ரன்களிலும், கேப்டன் யுவராஜ் சிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் அதிரடியாக ஆடிய கிளாசன் 20 பந்துகளில் 41 ரன்களையும், பொல்லார்ட் 13 பந்துகளில் 30 ரன்களையும் எடுத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டொராண்டோ நேஷனல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வான்கூவர் நைட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.