தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'சும்மா கிழி' தோனி குறித்த காணொலியை வெளியிட்ட சிஎஸ்கே! - சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்த காணொலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

'The sweet king's here': CSK shares video of MS Dhoni
'The sweet king's here': CSK shares video of MS Dhoni

By

Published : May 20, 2020, 12:33 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி குறித்தான காணொலிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் தோனி தனது பயிற்சிக்குச் செல்லும்போது, சக ஊழியர்களுடன் நடந்துகொள்ளும் விதம் குறித்து 'சும்மா கிழி' என்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸான டயலாக்குடன் இணைத்து வெளியிட்டுள்ளது.

இதனைக் கண்ட தோனியின் ரசிகர்கள், இக்காணொலியை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக தோனியின் மகள் ஸிவா தோனி, இருசக்கர வாகனத்தை ஓட்ட முயற்சி செய்வது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெலுங்கிலிருந்து பஞ்சாபிக்கு மாறிய டேவிட் வார்னர் ஃபேமிலி!

ABOUT THE AUTHOR

...view details