ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு ஐசிசி இடைக்கால் தடை விதித்தது. இதனால் இனிவரும் ஐசிசி தொடர்களில் அந்த அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் பலம் பொருந்திய ஆஸ்திரேலியா அணியை லீக் போட்டியில் தோற்கடித்து அதிர்ச்சியளித்தது ஜிம்பாப்வே. பல முன்னணி அணிகளைக் கூட வென்ற அணி என்ற பெருமையை படைத்த ஜிம்பாப்வேவுக்கு தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது.
பல முன்னணி அணிகளைக் கூட வென்ற ஜிம்பாப்வே அணி இந்தத் தடையினால் வரும் 2020ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அந்த அணி பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் சிகந்தர் ரஸா கூறும்போது, “இப்போதைக்கு நாங்கள் இருதயம் உடைந்து போயுள்ளோம். இன்னமும் நாங்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்கள் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு சிறிய காலத்திற்க்குள் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது இருதயம் சுக்குநூறாகியுள்ளது. என்னால் இதனை ஜீரணிக்க முடியவில்லை” என்று வேதனை தோய்ந்த குரலில் பேசினார்.